/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 11, 2025 02:17 AM
ஆத்துார், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆத்துார் பசுமை மைய அறக்கட்டளை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், பேரணியை, ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தனியார் பள்ளி மாணவ, மாணவியர், ரோட்டரி கிளப், மிட்டவுன் ரோட்டரி கிளப், ஆதவன் லயன்ஸ் கிளப், இந்திய மருத்துவ சங்கம், ரெட் கிராஸ், இன்னர்வீல் சங்கம், பாரதி மகாத்மா பண்பாட்டு பேரவை உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர், ஊர்வலமாக சென்றனர்.
அப்போது சுற்றுச்சூழலை காக்க, மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை, பதாகைகளாக ஏந்தி சென்றனர். உடையார்பாளையம் வழியே சென்ற பேரணி, நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பசுமை மைய செயல் தலைவர் மணி, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார், நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபா கமால், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.