ADDED : ஜூன் 08, 2025 01:20 AM
தாரமங்கலம், தாரமங்கலம், பாப்பம்பாடி ஓடக்காட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. தறித்தொழில் செய்து வந்தார். இவரது தாய் இறந்துவிட்டதால், மாமா ரத்னவேல் வீட்டில் வசித்தார்.
சதீஷ்குமாருக்கு சிறு வயது முதலே, இதயத்தில் பிரச்னை இருந்ததால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு நெஞ்சுவலி அதிகமாக, சின்னப்பம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்றார். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். ரத்னவேல் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.