ADDED : ஜூலை 10, 2024 07:13 AM
காரிப்பட்டி: காரிப்பட்டி, கருமாபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 37.
ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த மார்ச்சில், அவர் வீடு அருகே நிறுத்தியிருந்த, 'பல்சர்' பைக் திருடுபோனது. இதுகுறித்து அவர் புகார்படி, காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.இந்நிலையில், அம்மாபேட்டை போலீசார், சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி தாமோதரன், 21, என்பவரை ஒரு வழக்கில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கருமாபுரத்தில் பைக் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனால் அவரை, பைக் திருடிய வழக்கிலும் காரிப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.