/உள்ளூர் செய்திகள்/சேலம்/பெண்கள் கர்ப்ப பதிவு விபரம்; இணையத்தில் பதிய உத்தரவுபெண்கள் கர்ப்ப பதிவு விபரம்; இணையத்தில் பதிய உத்தரவு
பெண்கள் கர்ப்ப பதிவு விபரம்; இணையத்தில் பதிய உத்தரவு
பெண்கள் கர்ப்ப பதிவு விபரம்; இணையத்தில் பதிய உத்தரவு
பெண்கள் கர்ப்ப பதிவு விபரம்; இணையத்தில் பதிய உத்தரவு
ADDED : ஜூலை 25, 2024 01:12 AM
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: திருமணமான பெண்கள் கர்ப்பம் அடைந்ததும், 12 இலக்கு கொண்ட நிரந்தர கர்ப்ப பதிவு எண்ணை, 'பிக்மி' என்ற இணையத்தில் தேவைப்-படும் விபரம், ஆவணங்களை சமர்ப்பித்து சுயமாக பெறலாம்.
ஏற்கனவே தாய் - சேய் நல அட்டை வைத்திருந்தாலும் இந்த இணையத்தில் அவசியம் பதிவு செய்து, 12 இலக்கு எண் பெற வேண்டும். குழந்தை பிறப்பு, பதிவு சான்று, மகப்பேறு நிதியுதவி பெற கர்ப்ப பதிவு எண் கட்டாயம் தேவை. கர்ப்பத்தை பதிவு செய்ய, கர்ப்பி-ணியின் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், ஆதார் எண், கணவர் பெயர், வயது, திருமண தேதி, மருத்துவ பதிவு, முந்தைய கர்ப்பம், பிரசவம், கருக்கலைப்பு விபரம், கர்ப்பத்துக்கு முன் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, கர்ப்பிணி சிகிச்சை பெறும் மருத்துவமனை பெயர், இடம், ஊர் உள்ளிட்ட தகவல்-களை, https://picme.tn.gov.in என்ற இணையத்தில் சுயமாக பதிவு செய்யலாம். தகவலுக்கு, அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம்.