/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வலிப்பால் சாக்கடையில் விழுந்த பெண் உயிரிழப்பு வலிப்பால் சாக்கடையில் விழுந்த பெண் உயிரிழப்பு
வலிப்பால் சாக்கடையில் விழுந்த பெண் உயிரிழப்பு
வலிப்பால் சாக்கடையில் விழுந்த பெண் உயிரிழப்பு
வலிப்பால் சாக்கடையில் விழுந்த பெண் உயிரிழப்பு
ADDED : ஜூன் 06, 2025 01:30 AM
ஆத்துார்,ஆத்துார், காட்டுக்கோட்டை, நேரு நகரை சேர்ந்த, ராஜா மனைவி பவதாரணி, 24. இவர் வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மே, 20 அதிகாலை, 5:30 மணிக்கு, வீடு அருகே நடந்து சென்றபோது, வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது தெரு சாக்கடையில் விழுந்துள்ளார்.
அவரை, மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.