/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'உதயநிதி உடல் நலக்குறைவு விளக்கம் அளிப்பார்களா?' 'உதயநிதி உடல் நலக்குறைவு விளக்கம் அளிப்பார்களா?'
'உதயநிதி உடல் நலக்குறைவு விளக்கம் அளிப்பார்களா?'
'உதயநிதி உடல் நலக்குறைவு விளக்கம் அளிப்பார்களா?'
'உதயநிதி உடல் நலக்குறைவு விளக்கம் அளிப்பார்களா?'
ADDED : ஜூன் 03, 2025 01:19 AM
சேலம்,
''உதயநிதிக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது எதனால் என்பதை விளக்க வேண்டும்,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார்.
சேலத்தில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரையில் வரும், 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. பா.ஜ., மற்றும் ஆன்மிக உணர்வுக்கு எதிராக பல்வேறு தவறான பிரசாரங்கள், எதிர்மறை கருத்துகள் பரப்பப்பட்டன. அரசியல் பிழைப்புக்காக நாட்டு மக்களை ஏமாற்றி, ஹிந்து தெய்வங்களை அவமானப்படுத்துவோருக்கு இந்த மாநாடு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும். மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், நல்ல ஆரோக்கியத்துடன் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதிக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு காரணம் என்ன என தெரியபடுத்த வேண்டும். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது. இதில் இருந்து தப்பிக்கவே, உதயநிதிக்கு உடல் நிலை சரியில்லை என்கின்றனர்.
பொதுவாக ஆட்சி கலைப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுவதில்லை, தி.மு.க., அரசு எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வதிலேயே குறியாக உள்ளது. தொடர்ந்து நான்கு மாதம் பா.ஜ., தொடர் பிரசாரம் மேற்கொள்ளும். இதன் மூலம், தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து துாக்கி வீசும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு கூறினார்.