ஆத்துார் தனி மாவட்டம் அறிவிக்கப்படுமா
ஆத்துார் தனி மாவட்டம் அறிவிக்கப்படுமா
ஆத்துார் தனி மாவட்டம் அறிவிக்கப்படுமா
ADDED : ஜூன் 12, 2025 01:40 AM
சேலம், 11 சட்டசபை தொகுதிகளுடன், சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. மாவட்டத்தில், 2வது பெரிய நகரம் ஆத்துார். அப்பகுதியை சுற்றி, கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஏற்காடு, தலைவாசல் தாலுகா பகுதி உள்பட, 130 ஊராட்சிகளை இணைத்து, ஆத்துார் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் செல்ல, குறைந்தது, ஒன்றறை மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. ஆத்துார் தனி மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி, பல ஆண்டாக பல்வேறு கட்சிகள், அமைப்புகள், பல போராட்டங்களை நடத்தியுள்ளன.
இதை விட சிறு மாவட்டங்கள் கூட, 2 ஆக பிரிக்கப்பட்ட நிலையில், ஆத்துாரை தலைமையிடமாக வைத்து, தனி மாவட்டம் பிரிப்பது தாமதமாகி வருவது, அப்பகுதி மக்களுக்கு சிரமத்தையே தருகிறது. அதனால் சேலம் மாவட்டத்தை பிரித்து ஆத்துார், தனி மாவட்டம் என அரசு அறிவிக்க வேண்டும்.