/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முதல் கணவருடன் மீண்டும் பழக்கம் 2வது கணவர் கண்டிப்பால் மனைவி தற்கொலை முதல் கணவருடன் மீண்டும் பழக்கம் 2வது கணவர் கண்டிப்பால் மனைவி தற்கொலை
முதல் கணவருடன் மீண்டும் பழக்கம் 2வது கணவர் கண்டிப்பால் மனைவி தற்கொலை
முதல் கணவருடன் மீண்டும் பழக்கம் 2வது கணவர் கண்டிப்பால் மனைவி தற்கொலை
முதல் கணவருடன் மீண்டும் பழக்கம் 2வது கணவர் கண்டிப்பால் மனைவி தற்கொலை
ADDED : ஜூலை 03, 2025 02:23 AM
சேலம், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, இனாம் பைரோஜி, ஆலத்திக்காட்டை சேர்ந்தவர் சந்தியா, 21. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், 3 ஆண்டுக்கு முன் திருமணமானது. ஆனால் ஒரு மாதத்தில் கணவரை பிரிந்து, சந்தியா, அவரது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இரு ஆண்டுக்கு முன், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரை, 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன், ஆட்டையாம்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு சந்தியா வந்தார். அப்போது முதல் கணவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த முருகன், சந்தியாவை கண்டித்துள்ளார்.
இதில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் வேதனை அடைந்த சந்தியா, தாய் வீட்டில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர். திருமணம் ஆகி, 2 ஆண்டுகளே ஆனதால், சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா விசாரிக்கிறார்.