/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் அருகே காதலி உயிரிழந்த நிலையில் காதலனும் உயிரிழப்புசேலம் அருகே காதலி உயிரிழந்த நிலையில் காதலனும் உயிரிழப்பு
சேலம் அருகே காதலி உயிரிழந்த நிலையில் காதலனும் உயிரிழப்பு
சேலம் அருகே காதலி உயிரிழந்த நிலையில் காதலனும் உயிரிழப்பு
சேலம் அருகே காதலி உயிரிழந்த நிலையில் காதலனும் உயிரிழப்பு
ADDED : பிப் 06, 2024 09:47 AM
காரிப்பட்டி,: காரிப்பட்டி அருகே, காதலி உயிரிழந்த நிலையில், நேற்று காதலனும் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், காரிப்பட்டி அடுத்த நீர்முள்ளிக்குட்டையை சேர்ந்த சதாசிவம் மகள் முத்தமிழ் இளவரசி, 20. அதே பகுதியை சேர்ந்த பாரத்குமார் என்பருடன், இரு ஆண்டுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சில மாதங்களாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முத்தமிழ் இளவரசி தாய் வீட்டில் தங்கியுள்ளார்.
அதேபோல், அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் லாரி டிரைவர் சக்தி வேல், 26, என்பவருக்கும், ஜெயக்கொடி, 25, என்ற பெண்ணுக்கும் திருமணமான நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில் சக்திவேலுக்கும், முத்தமிழ் இளவரசிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, கடந்த, 24ல் இருவரும் வீட்டில் இருந்து மாயமாகினர். இதனால் மகளை காணவில்லை என, முத்தமிழ் இளவரசி தாய் மங்கையர்கரசி காரிப்பட்டி போலீசில் புகாரளித்தார்.
முத்தமிழ் இளவரசி, சக்திவேலுடன் ஓடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடினர். இந்நிலையில் கடந்த, 29 நள்ளிரவு 2:00 மணியளவில் முத்தமிழ் இளவரசி தாய் வீட்டிற்கு வந்து, சக்திவேலுடன் சேர்ந்து பூச்சிக்கொல்லி விஷமருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த, 2ம் தேதி மாலை முத்தமிழ் இளவரசி உயிரிழந்தார். சக்திவேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை அவரும் உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'இருவரும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், கள்ளக்காதல் ஏற்பட்டு ஓடியுள்ளனர். ஊர் மக்களுக்கு தெரிந்ததால், அவமானம் ஏற்பட்டதாக நினைத்து, இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது' என்றனர்.