/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பஸ் வசதி எப்ப கிடைக்கும்? பெலாப்பாடி மக்கள் அவதி பஸ் வசதி எப்ப கிடைக்கும்? பெலாப்பாடி மக்கள் அவதி
பஸ் வசதி எப்ப கிடைக்கும்? பெலாப்பாடி மக்கள் அவதி
பஸ் வசதி எப்ப கிடைக்கும்? பெலாப்பாடி மக்கள் அவதி
பஸ் வசதி எப்ப கிடைக்கும்? பெலாப்பாடி மக்கள் அவதி
ADDED : ஜூன் 03, 2025 01:17 AM
சேலம், சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த அருநுாற்றுமலை, ஆலடிப்பட்டி ஊராட்சி, பெலாப்பாடியை சேர்ந்த மக்கள், ஒருசேர திரண்டு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்:
பெலாப்பாடி, வாலுாத்து, தாளூர் ஆகிய மூன்று குக்கிராமங்களில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, 5 ஆண்டுக்கு முன், புழுதிக்குட்டை அணை, சந்துமலை பஸ் ஸ்டாப் சந்திப்பில் இருந்து, பெலாப்பாடி வரை 7 கி.மீ., துாரத்துக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
அதில், 3 கி.மீ., வனப்பகுதி, 4 கி.மீ., ஊராட்சி சாலை அடங்கும். சாலை போட்ட நாள் முதல், மினிபஸ் வசதி கேட்டு வருகிறோம். பஸ்வசதி இல்லாத காரணத்தால், குக்கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். சிரமப்பட்டு, குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆண், பெண் தொழிலாளிகள் நிம்மதியாக வேலைக்கு போக முடியாத நிலை உள்ளது. நோயாளிகள், கர்ப்பிணி பெண்களை பிரசவத்துக்கு அழைத்து செல்ல படாதபாடு பட வேண்டி உள்ளது. எனவே, குக்கிராமமக்களின் துயரங்கள் தீர, மினி பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.