/உள்ளூர் செய்திகள்/சேலம்/த.வெ.க., கொள்கைபரப்பு செயலருக்கு வரவேற்புத.வெ.க., கொள்கைபரப்பு செயலருக்கு வரவேற்பு
த.வெ.க., கொள்கைபரப்பு செயலருக்கு வரவேற்பு
த.வெ.க., கொள்கைபரப்பு செயலருக்கு வரவேற்பு
த.வெ.க., கொள்கைபரப்பு செயலருக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 01, 2025 01:16 AM
சேலம் சேலம் வந்த த.வெ.க., மாநில கொள்கைபரப்பு பொதுச்செயலருக்கு, மத்திய மாவட்ட த.வெ.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலத்தை சேர்ந்தவர் டாக்டர் அருண்ராஜ். மருத்துவராக பணிபுரிந்து வந்த இவர், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐ.ஆர்.எஸ்., அதிகாரியானார். பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, த.வெ.க.,வில் இணைந்த நிலையில், அவருக்கு கொள்கைபரப்பு மாநில பொதுச்செயலர் பொறுப்பு வழங்கப்பட்டது.
கட்சி பொறுப்பேற்ற பின், நேற்று சேலம் வந்த அவருக்கு, மத்திய மாவட்ட த.வெ.க., சார்பில், சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. ஜங்ஷன் ரயில் நிலையத்தில், மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து த.வெ.க., கொள்கைபரப்பு மாநில பொதுச்செயலர் அருண்ராஜ், கட்சியின் கொள்கை தலைவர்களான ஈ.வெ.ரா., அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.