/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்'இன்று 1,143 ஓட்டுச்சாவடியில் உறுதி ஏற்பு 'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்'இன்று 1,143 ஓட்டுச்சாவடியில் உறுதி ஏற்பு
'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்'இன்று 1,143 ஓட்டுச்சாவடியில் உறுதி ஏற்பு
'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்'இன்று 1,143 ஓட்டுச்சாவடியில் உறுதி ஏற்பு
'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்'இன்று 1,143 ஓட்டுச்சாவடியில் உறுதி ஏற்பு
ADDED : செப் 15, 2025 12:54 AM
சேலம்:சேலம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, தி.மு.க., அலுவலகத்தில், அமைச்சர் ராஜேந்திரன் நேற்று அளித்த பேட்டி:
கடந்த ஜூலை, 1ல், முதல்வர் ஸ்டாலின், 'ஓரணி யில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில், 6 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில், 52 சதவீத இலக்கை எட்டியுள்ளோம். இதனால், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, செப்., 15ல்(இன்று), தி.மு.க., மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட, 1,143 ஓட்டுச்சாவடிகளிலும், 'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்' எனும் உறுதிமொழி ஏற்பு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நிருபர்கள், நடிகர் விஜய் குறித்து கேட்டபோது, ''கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், ஈ.வெ.ரா.,
அண்ணாதுரை, கருணாநிதி வழியில், தெளிவான அரசியல் பயணத்தை பின்பற்றி வருகிறோம். எங்களுக்கு யாரைப்பற்றியும் அச்சம், கவலை இல்லை. மற்றவர்களின் பயணங்களில் அக்கறை, அவசியம், எங்களுக்கு இல்லை,'' என்றார்.