/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாதம் இருமுறை குடிநீர் வினியோகம் ஆத்துார் நகராட்சி மக்கள் பெரும் அவதி மாதம் இருமுறை குடிநீர் வினியோகம் ஆத்துார் நகராட்சி மக்கள் பெரும் அவதி
மாதம் இருமுறை குடிநீர் வினியோகம் ஆத்துார் நகராட்சி மக்கள் பெரும் அவதி
மாதம் இருமுறை குடிநீர் வினியோகம் ஆத்துார் நகராட்சி மக்கள் பெரும் அவதி
மாதம் இருமுறை குடிநீர் வினியோகம் ஆத்துார் நகராட்சி மக்கள் பெரும் அவதி
ADDED : செப் 04, 2025 01:43 AM
ஆத்துார்,
ஆத்துாரில், மாதம் இருமுறை மட்டும் காவிரி குடிநீர் வினியோகிப்பதால், நகராட்சி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. அதில், 21,480 குடியிருப்புகளில், 12,289 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேட்டூர் - ஆத்துார் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அந்த குடிநீரை, சீரான முறையில் வழங்க, 9 இடங்களில் மேல்நிலை தொட்டி அமைத்து, 78 மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் வினியோகிக்கப்
படுகிறது.
கடந்த ஜூலை முதல், 12 முதல், 16 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகிப்பதால், பாத்திரங்களில் இரு வாரங்களாக பிடித்து வைத்த குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் வேறு குடிநீர் ஆதாரமும் இல்லாததால், ஆத்துார் நகர் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி குடிநீர் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
நகராட்சிக்கு தினமும், 60 லட்சம் லிட்டர் குடிநீரை, குடிநீர் வடிகால் வாரியம் வழங்க வேண்டும். சில மாதங்களுக்கு முன், 50 லட்சம் குடிநீர் வினியோகித்தபோது, சீரான முறையில் வழங்கப்பட்டது. ஜூலை முதல், தினமும் சராசரியாக, 35 லட்சம் லிட்டர் குடிநீர் வருவதால், மாதம் இருமுறை என்ற அளவில் வினியோகிக்க வேண்டி உள்ளது. குழாய் உடைப்பு, மின்தடை போன்ற பிரச்னைகளாலும், அவ்வப்போது வினியோகம் தாமதம் ஏற்படுகிறது.
மேலும் வடிகால் வாரியத்துக்கு, 6.50 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. குடிநீர் கட்டணமாக, இணைப்புக்கு தலா, 150 வீதம் வசூலிக்கப்படுகிறது. மக்களிடம் இருந்து, 3 கோடி ரூபாய் நிலுவை தொகை வசூலிக்க வேண்டும். குடிநீர் குறைந்த அளவில் வருவதால், வடிகால் வாரியத்துக்கு, பாதி அளவில் தான் பணம் செலுத்தும் நிலை உள்ளது. குடிநீர் வினியோகம் பாதிப்பு குறித்து, நகராட்சி தலைவி உள்ளிட்ட கவுன்
சிலர்கள், அலுவலர்கள், சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வுக்கு வலியுறுத்தல்
மேட்டூர் - ஆத்துார் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், டவுன் பஞ்சாயத்துகளான, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், நகராட்சிகளான நரசிங்கபுரம், ஆத்துார் ஆகிய பகுதிகளுக்கு, குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீரை, அந்தந்த டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, ஒன்றியங்கள் சரியான அளவில் எடுக்கின்றனரா என, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்தால் தான், இதற்கான தீர்வு கிடைக்கும் என, ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.