ADDED : மே 27, 2025 02:05 AM
'
சேலம், சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், சி.எஸ்.ஐ., சர்ச் மற்றும் உழவர் சந்தை அருகில், இரண்டு இடங்களில், 1,100 மீட்டர் விட்டமுள்ள ஆர்.சி.சி., பிரதான குடிநீர் பம்பிங் குழாயில் ஏற்பட்ட உடைப்பை, பழுது பார்க்கும் பணி, இன்று (மே 27) நடைபெற உள்ளது.
எனவே, சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.