Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.98.54 கோடி மோசடி வழக்கு விஸ்வரூபம்; வின் ஸ்டார் சிவக்குமார் பாஸ்போர்ட் முடக்கம்

ரூ.98.54 கோடி மோசடி வழக்கு விஸ்வரூபம்; வின் ஸ்டார் சிவக்குமார் பாஸ்போர்ட் முடக்கம்

ரூ.98.54 கோடி மோசடி வழக்கு விஸ்வரூபம்; வின் ஸ்டார் சிவக்குமார் பாஸ்போர்ட் முடக்கம்

ரூ.98.54 கோடி மோசடி வழக்கு விஸ்வரூபம்; வின் ஸ்டார் சிவக்குமார் பாஸ்போர்ட் முடக்கம்

UPDATED : டிச 02, 2025 08:23 AMADDED : டிச 02, 2025 03:04 AM


Google News
Latest Tamil News
சேலம்: ரூ.98.54 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் வின் ஸ்டார் சிவக்குமார், வெளிநாடு தப்பி ஒடாமல் இருக்க, அவரது பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

சேலம் பெரியபுதுாரை சேர்ந்தவர் சிவக்குமார், 58. இவர், 2016ல், வின் ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ், சவுபாக்யா சிட்டி டெவலப்பர்ஸ் என இரு நிறுவனங்களை அடுத்தடுத்து தொடங்கி, 98.54 கோடி ரூபாய் முதலீடு வசூலித்து மோசடி செய்தார். இந்த வழக்கு, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தருவதாக கூறி, 2023ல், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார். ஆனால் அறிவித்தப்படி, 2 ஆண்டை கடந்தும் பணத்தை தரவில்லை. அத்துடன், உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தங்கராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டிக்கும், அவர் அறவே ஒத்துழைப்பு தராமல் போக்குகாட்டினார்.

இதையடுத்து கடந்த ஜூன், 25ல், ஓய்வு நீதிபதி குமாரசரவணன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டிக்கும், சிவக்குமார் முழு ஒத்துழைப்பு தரவில்லை என புகார் எழுந்தது. அதனால், அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமின் கடந்த நவ.,12ல், உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் அவரை கைது செய்ய, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால், டான்பின் நீதிமன்றத்தில் கடந்த 21ல், மனுதாக்கல் செய்யப்பட்டு, 28ல் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிவக்குமாரை கைது செய்ய, நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். அதையடுத்து, டி.எஸ்.பி., ஹரிசங்கரி தலைமையில் நால்வர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு சிவக்குமாரை தேடும்பணி தீவிரமானது.

இந்நிலையில் அவர், வெளிநாடுக்கு தப்பி செல்ல வாய்ப்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனால் சிவக்குமாரின் பாஸ்போர்ட்டை முடக்க போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, டி.எஸ்.பி., பரிந்துரை கடிதம், நேற்று கோவை பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதில், மோசடி வழக்கில் சிவக்குமாரை தேடி வருவதால், அவர் வெளிநாடு தப்பி விடாதபடி, அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us