/உள்ளூர் செய்திகள்/சேலம்/துணைவேந்தர் விவகாரம் 5 பேரிடம் 'கிடுக்கிப்பிடி'துணைவேந்தர் விவகாரம் 5 பேரிடம் 'கிடுக்கிப்பிடி'
துணைவேந்தர் விவகாரம் 5 பேரிடம் 'கிடுக்கிப்பிடி'
துணைவேந்தர் விவகாரம் 5 பேரிடம் 'கிடுக்கிப்பிடி'
துணைவேந்தர் விவகாரம் 5 பேரிடம் 'கிடுக்கிப்பிடி'
ADDED : ஜன 05, 2024 12:06 AM
ஓமலுார்:சேலம், கருப்பூரில், பெரியார் பல்கலை துணைவேந்தராக இருந்த ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், கணினி இணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ராம்கணேஷ் இணைந்து, தனியார் நிறுவனத்தை துவங்கியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்த புகாரில், துணைவேந்தர் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமினில் வந்தார். இதுதொடர்பாக, கருப்பூர் போலீசார், பல்கலையில் பணிபுரியும் உளவியல் துறையை சேர்ந்த முனைவர் ஜெயக்குமார், பொருளியல் துறை தலைவர் ஜெயராமன், மேலாண் கல்வி துறை பேராசிரியர் சுப்ரமணியபாரதி, விலங்கியல் துறை முனைவர் நரேஷ்குமார், தொகுப்பூதிய பணியாளர் தண்டீஸ்வரன் ஆகியோருக்கு, 'சம்மன்' அனுப்பினர்.
நேற்று சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், ஐந்து பேரும் ஆஜராகினர். அவர்களிடம் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் தனிப்படை போலீசார், ஒவ்வொருவரிடமும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். காலை, 10:00 மணிக்கு தொடங்கிய விசாரணை, மதியம், 2:00 மணிக்கு முடிந்தது. இதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.