ADDED : அக் 08, 2025 01:38 AM
ஓமலுார், சென்னையில், வி.சி., தலைவர் திருமாவளவன் பயணித்த கார், இருசக்கர வாகனத்துடன் மோதியது. இதனால் தலைவருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி, சேலம் வடக்கு
மாவட்ட செயலர் தெய்வானை தலைமையில் அக்கட்சியினர் நேற்று, ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள அண்ணா சிலை அருகே, மாலை, 6:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், ஓமலுார் - சேலம் சாலையில், 5 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். பின் அங்கு வந்த, ஓமலுார் போலீசார் சமாதானப்படுத்த, அவர்கள் கலைந்து சென்றனர்.


