/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நீதிபதி மீது காலணி வீச்சு வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம் நீதிபதி மீது காலணி வீச்சு வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம்
நீதிபதி மீது காலணி வீச்சு வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம்
நீதிபதி மீது காலணி வீச்சு வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம்
நீதிபதி மீது காலணி வீச்சு வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 11, 2025 01:08 AM
சேலம், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வக்கீலை கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், வி.சி., கட்சி சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் செயலர் காஜாமைதீன் தலைமை வகித்தார்.
அதில் காலணி வீசிய வக்கீலை கைது செய்யவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலர்கள் மொழியரசு, மெய்யழகன், சுந்தர், ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணை செயலர் பாவேந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.


