/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோலாட்டத்துடன் வசந்த உற்சவ விழா நிறைவு கோலாட்டத்துடன் வசந்த உற்சவ விழா நிறைவு
கோலாட்டத்துடன் வசந்த உற்சவ விழா நிறைவு
கோலாட்டத்துடன் வசந்த உற்சவ விழா நிறைவு
கோலாட்டத்துடன் வசந்த உற்சவ விழா நிறைவு
ADDED : ஜூன் 04, 2025 02:00 AM
சேலம் :அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியையொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 5 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவ விழா, கடந்த, 30ல்
தொடங்கியது.
செயற்கை நந்தவன குளத்தின் ஊஞ்சலில் தினமும் மாலை, சவுந்தரவல்லி தாயாருடன் சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜர் அருள்பாலித்து வந்தார். நிறைவு நாளான நேற்று, கிருஷ்ண பிருந்தாவன கலைக்குழுவினரின் பாரம்பரிய, 'கோணங்கி' நடனம், பெண்களின் கோலாட்டம் நடந்தது. நிறைவாக மகா தீபாராதனையுடன் பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.