ADDED : செப் 24, 2025 01:30 AM
ஓமலுார், செவ்வாய் சந்தை அருகே, அரசு உதவி பெறும் வேலாசாமிசெட்டியார் பள்ளி சுற்றுச்சுவர் அருகே, மாணவர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தும், தனியார் சுற்றுலா வேன் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று மதியம், 2:00 மணிக்கு, அந்த வேனில் இருந்து புகை வெளியேறியது.
அருகில் இருந்தவர்கள், முன்புற கண்ணாடியை உடைத்து தீயை அணைக்க முயன்றனர். தொடர்ந்து அங்கு வந்த ஓமலுார் தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். வேனின் முன்புறம் சேதமானது. டிரைவர் சீட் அருகே மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என, வீரர்கள் தெரிவித்தனர். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.