/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பேராசிரியர் பேசிய ஆடியோ 'வைரல்' விசாரணை குழு அமைக்க வலியுறுத்தல் பேராசிரியர் பேசிய ஆடியோ 'வைரல்' விசாரணை குழு அமைக்க வலியுறுத்தல்
பேராசிரியர் பேசிய ஆடியோ 'வைரல்' விசாரணை குழு அமைக்க வலியுறுத்தல்
பேராசிரியர் பேசிய ஆடியோ 'வைரல்' விசாரணை குழு அமைக்க வலியுறுத்தல்
பேராசிரியர் பேசிய ஆடியோ 'வைரல்' விசாரணை குழு அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 27, 2025 01:42 AM
ஓமலுார் :சேலம் பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன், நேற்று தமிழக அரசுக்கு அனுப்பிய மனு:
பெரியார் பல்கலை பேராசிரியர் பெரியசாமி, தமிழ் துறை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், மொட்டை கடிதம், ஆள் வைத்து மிரட்டுதல் உள்ளிட்ட தகாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான சில ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளோம்.
பெரியசாமியால், 15க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள், படிப்பை பாதியில் விட்டுள்ளனர். பதிப்புத்
துறையில், 10 லட்சம் ரூபாய் ஊழல், கொள்முதல் முறைகேடு, போலி பணி அனுபவ சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது, கல்லுாரிகளை மிரட்டியது என, பெரியசாமி மீது புகார்கள் நீள்கின்றன. அதனால் தமிழக அரசு உடனே விசாரணை குழு அமைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பேராசிரியர் பெரியசாமி பேசிய ஆடியோவில், பொருளியல் துறை உதவி பேராசிரியர் வைத்தியநாதன் உள்பட சிலரை திட்டுவது போன்று, 5 ஆடியோக்கள் பரவி வருகின்றன.