Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீர் ஆதார கிணற்றை புனரமைக்க வலியுறுத்தல்

குடிநீர் ஆதார கிணற்றை புனரமைக்க வலியுறுத்தல்

குடிநீர் ஆதார கிணற்றை புனரமைக்க வலியுறுத்தல்

குடிநீர் ஆதார கிணற்றை புனரமைக்க வலியுறுத்தல்

ADDED : அக் 14, 2025 02:18 AM


Google News
சேலம், கெங்கவல்லி அடுத்த பச்ச மலை ஊராட்சி, மலங்காடு மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய கோரிக்கை மனு விபரம்:

மலங்காடு கிராமத்தில், 2010 -11ல், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், திறந்தவெளி கிணறு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து அதன்மூலம் குடிநீர் வினியோகம் நடந்தது. கடந்த 2015ல், கிணற்றின் உட்புற சுற்றுச்சுவர் சரிந்து, சிதிலமடைந்து விட்டது. அதனால் மழை காலங்களில் காட்டில் உருவாகும் வெள்ளநீர், ஒட்டுமொத்தமாக கிணற்றில் விழுந்து, முழுமையாக நிரம்பிவிடும். அதை குடிநீராக பயன்படுத்தும் மக்கள், பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகிறோம்.

இந்த பாதிப்பு குறித்து, 2020 முதல், கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மலங்காடு மக்களை நோய் பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க, சுகாதாரமான குடிநீர் கிடைக்க ஏதுவாக, திறந்தவெளி கிணற்றின் சுற்றுச்சுவரை சீரமைத்து, போதுமான அளவில் குடிநீர் கிடைக்க, ஆழப்படுத்தியும் தர வேண்டும். மேலும், தற்போதுள்ள, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தொட்டி போதுமானதாக இல்லை. அதனால், குடிநீர் தட்டுப்பாடு வருகிறது. அதை தவிர்க்க, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us