/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏரியில் கழிவுநீரை விடும் அவலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் ஏரியில் கழிவுநீரை விடும் அவலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஏரியில் கழிவுநீரை விடும் அவலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஏரியில் கழிவுநீரை விடும் அவலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஏரியில் கழிவுநீரை விடும் அவலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 01, 2025 01:47 AM
பனமரத்துப்பட்டி, சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு நேற்று இரவு, 8:00 மணிக்கு, குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவில் வழியே, 'செப்டிக் டேங்க்' சுத்திகரிப்பு வாகனம் சென்றது. தொடர்ந்து லாரியில் இருந்து கழிநீரை ஏரிக்குள் திறந்து விட்டனர். கம்யூ., கட்சியினர், எதிர்ப்பு தெரிவித்து,
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஒன்றிய குழு உறுப்பினர் ஜீவா உள்ளிட்டோர் கூறுகையில், ''கழிப்பிட கழிவை, ஏரி குடிநீர் திட்டப்பகுதியில் விடுகின்றனர். இதை தடுக்க வேண்டும்,'' என்றார்.
ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், '10 ஆண்டாக, ஏரிக்குள் செப்டிக் டேங்க் கழிவுநீரை விடுகிறோம். தற்போது தடுக்கின்றனர். ஏரிக்குள், 2 ஏக்கரில் குப்பை கொட்டவும், கழிவுநீர் விடவும், சேலம் மாநகராட்சி அதிகாரிகள் வாய்மொழியாக அனுமதித்துள்ளனர்' என்றனர்.