/உள்ளூர் செய்திகள்/சேலம்/பாதாள சாக்கடை பணி ரூ.246 கோடியில் தொடக்கம்பாதாள சாக்கடை பணி ரூ.246 கோடியில் தொடக்கம்
பாதாள சாக்கடை பணி ரூ.246 கோடியில் தொடக்கம்
பாதாள சாக்கடை பணி ரூ.246 கோடியில் தொடக்கம்
பாதாள சாக்கடை பணி ரூ.246 கோடியில் தொடக்கம்
ADDED : பிப் 25, 2024 03:56 AM
சேலம்: 'அம்ரூத் 2.0' திட்டத்தில், சேலம் மாநகராட்சியில், 246.20 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை திட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் சூரமங்கலம் மண்டலம், 20, 21, 22, 24வது வார்டுகளில் விடுபட்ட பகுதிகளிலும், 1, 2, 3, 23, 24, 25 மற்றும் அஸ்தம்பட்டி மண்டலத்தில், 4, 5வது வார்டுகள், கொண்டலாம்பட்டி மண்டலத்தில், 50, 51, 54, 57, 58, 59வது வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி, 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு மேற்கொள்ளப்படும். இப்பணிகளை, வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின், நேற்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
மேலும், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், 18வது வார்டில், 85 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் வளாகத்தில் பொருள் மீட்பு வசதி மையத்தையும் திறந்துவைத்தார். சேலத்தில் நடந்த விழாவில், மேயர் ராமச்சந்திரன்,
கமிஷனர் பாலச்சந்தர் பங்கேற்றனர்.