/உள்ளூர் செய்திகள்/சேலம்/நிலத்தை அபகரிக்க முயற்சி? அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., மீது புகார்நிலத்தை அபகரிக்க முயற்சி? அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., மீது புகார்
நிலத்தை அபகரிக்க முயற்சி? அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., மீது புகார்
நிலத்தை அபகரிக்க முயற்சி? அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., மீது புகார்
நிலத்தை அபகரிக்க முயற்சி? அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., மீது புகார்
ADDED : பிப் 06, 2024 09:48 AM
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த பெரியேரிப்பட்டி ஊராட்சி, வேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி குப்புசாமி, 76. இவர், குடும்பத்துடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவின் விபரம்:
என் குடியிருப்புக்கு அருகே உள்ள ஒரு சென்ட் நிலத்தில், வீடு கட்ட கடந்த 4ல், நிலத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டேன். அப்போது ராஜமாணிக்கம், சின்னமுத்து உள்ளிட்ட சிலர் வீடு கட்டக்கூடாது என கூறி தகராறு செய்து, தாக்க முற்பட்டனர். இதுபற்றி தொளசம்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அ.தி.மு.க., ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, அவரது தந்தையான ஊராட்சி தலைவர் ராமசாமி ஆகியோர் துாண்டுதல் பேரில், இந்த மோதல் போக்கு உண்டானது. இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மணி எம்.எல்.ஏ., கூறுகையில், ''நத்தம் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து எப்படி வீடு கட்ட முடியும்? அது வழித்தடமாக பயன்படுவதால், மக்கள் ஒருசேர சேர்ந்து, காங்., கட்சியை சேர்ந்த குப்புசாமி மீது புகார் அளித்துள்ளனர்,'' என்றார்.
வி.ஏ.ஒ., வரதராஜன் கூறுகையில், ''ஏற்கனவே, நத்தம் புறம்போக்கில் வழங்கப்பட்ட, 3 சென்ட் பட்டா நிலத்தில் தான் குப்புசாமி வீடு கட்டி வசித்து வருகிறார். வீட்டருகே உள்ள, 2 சென்ட் காலி இடத்தில், ஒரு சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டார். அதை கடந்த, 29ல், அகற்றிய நிலையில் மீண்டும் ஆக்கிரமித்து கொண்டார். போலீஸ் துணையுடன் அவை அகற்றப்பட்டது. 2 சென்ட் நிலம், மக்கள் பொது பயன்பாடுக்கு உபயோகப்படுத்தப்படும்,'' என்றார்.