/உள்ளூர் செய்திகள்/சேலம்/அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பயிற்சிஅலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பயிற்சி
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பயிற்சி
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பயிற்சி
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பயிற்சி
ADDED : பிப் 25, 2024 04:15 AM
சேலம்: சேலம், சீரகாபாடி, விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பிரகாசமாக்க, பட்ட படிப்புகளுடன் கூடிய கூடுதல் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி நடத்தி, டீன் செந்தில்குமார் கூறியதாவது:
சமீபத்திய, எதிர்கால வளர்ச்சி கருதி, எங்கள் கல்லுாரி மாணவர்களுக்கு துறை சார்ந்த திறன் மேம்பாட்டு கூடுதல் சான்றிதழ் படிப்புகளையும், வேலைவாய்ப்பு சார்ந்த கூடுதல் சான்றிதழ் பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். குறிப்பாக தொழிற்துறை சார்ந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்படி, 'சீமன்ஸ்' சுகாதார நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் மூலம் கதிரியக்கவியல், இருதய சிகிச்சை, மருத்துவ ஆய்வக பிரிவு ஆகியவற்றுக்கு துறை ரீதியான திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்கி கூடுதல் சான்றிதழை தொழிற்துறை மூலம் வழங்கி வருகிறோம். இதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.