ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்
ADDED : செப் 06, 2025 02:10 AM
ஏற்காடு, :ஏற்காட்டுக்கு தினமும் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். குறிப்பாக பண்டிகை, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். அதன்படி நேற்று, ஓணம், மிலாது நபி பண்டிகையால், ஏற்காட்டை சுற்றி பார்க்க ஏராளமானோர் குவிந்தனர். அண்ணா, ஏரி, சூழல் சுற்றுலா, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் போன்ற இடங்களை குடும்பத்துடன் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து படகு இல்லத்துக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஆனைவாரியில் ஏமாற்றம்
ஆத்துார் அருகே, கல்லாநத்தம் ஊராட்சியில், முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சி உள்ளது. அங்கும் நேற்று ஏராளமானோர் சென்றனர். ஆனால் ஆணைவாரி நீர் வீழ்ச்சியில், தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடந்ததால் சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர்.