ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூன் 30, 2025 03:31 AM
ஏற்காடு: ஏற்காட்டில், கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் குவிந்து, பல்வேறு இடங்களை கண்டுகளித்தனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில், ஏற்காடும் ஒன்றாக உள்ளது. விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி கடந்த சனி, ஞாயிற்றுக்
கிழமைகளில் ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தி-ருந்தனர். இவர்கள் அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில் மற்றும் பல்-வேறு வியூ பாய்ன்ட்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்களில், தவிர்க்க முடியாத இடங்களில் ஒன்றான படகு இல்லம் சென்று, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இந்நிலையில் ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதி முழுவதும் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் ஏற்காடு முழுவதும் குளுகுளுவென மாறியது. இந்த இதமான சூழலை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர்.