/உள்ளூர் செய்திகள்/சேலம்/தை கடைசி முகூர்த்தம் பூக்கள் விலை உயர்வுதை கடைசி முகூர்த்தம் பூக்கள் விலை உயர்வு
தை கடைசி முகூர்த்தம் பூக்கள் விலை உயர்வு
தை கடைசி முகூர்த்தம் பூக்கள் விலை உயர்வு
தை கடைசி முகூர்த்தம் பூக்கள் விலை உயர்வு
ADDED : பிப் 11, 2024 02:02 PM
சேலம் : சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள வ.உ.சி., பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது.
அதன்படி கடந்த, 4ல் கிலோ, 500க்கு விற்ற மல்லி, நேற்று, 1,400 ரூபாயாகவும், 700க்கு விற்ற முல்லை, 1,400, 320க்கு விற்ற ஜாதிமல்லி, 700, 40க்கு விற்ற காக்கட்டான், 320, 30க்கு விற்ற மலை காக்கட்டான், 240, 50க்கு விற்ற கலர் காக்கட்டான், 320 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், 30க்கு விற்ற அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி தலா, 80, 80க்கு விற்ற செவ்வரளி, 160, 40க்கு விற்ற ஐ.செவ்வரளி, 100, 15க்கு விற்ற நந்தியாவட்டம், 300, 40க்கு விற்ற சி.நந்திவட்டம், 500 ரூபாய் என விலை உயர்ந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'பனிப்பொழிவால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. நாளை (இன்று) தை கடைசி முகூர்த்த நாள் என்பதால் தேவை அதிகரித்து பூக்கள் விலை உயர்ந்தது' என்றனர்.