/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆட்டுச்சந்தை நடத்துவோர் மீது நடவடிக்கை போலீசில் தெடாவூர் செயல் அலுவலர் புகார் ஆட்டுச்சந்தை நடத்துவோர் மீது நடவடிக்கை போலீசில் தெடாவூர் செயல் அலுவலர் புகார்
ஆட்டுச்சந்தை நடத்துவோர் மீது நடவடிக்கை போலீசில் தெடாவூர் செயல் அலுவலர் புகார்
ஆட்டுச்சந்தை நடத்துவோர் மீது நடவடிக்கை போலீசில் தெடாவூர் செயல் அலுவலர் புகார்
ஆட்டுச்சந்தை நடத்துவோர் மீது நடவடிக்கை போலீசில் தெடாவூர் செயல் அலுவலர் புகார்
ADDED : ஜூலை 04, 2025 01:23 AM
கெங்கவல்லி, தலைவாசல் அருகே வீரகனுாரில், சனிதோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது. அங்கு சுங்க கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக கூறி, கடந்த ஜூன், 20ல், வியாபாரிகள், தெடாவூர் சென்றனர். அங்கு, தி.மு.க.,வை சேர்ந்த, தெடாவூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் வேலு, சந்தை நடத்த இடம் ஒதுக்கீடு செய்து தந்தார். இதனால் ஜூன், 21, 28ல் தெடாவூரில் சந்தை கூடியது. ஆனால் வீரகனுாரில் தொடர்ந்து சந்தை செயல்பட வேண்டும் என, அப்பகுதி பகுதி மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டர் பிருந்தாதேவியிடம் மனு அளித்தனர். இதுதொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவுக்கு பின், தெடாவூரில் ஆட்டுச்சந்தை செயல்பட தடை செய்து, கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் தெடாவூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் யவனராணி நேற்று, கெங்கவல்லி போலீசில் அளித்த மனு:
வீரகனுாரை சேர்ந்த, ஆட்டுச்சந்தை ஒப்பந்ததாரர் ரமேஷ். இவர் தெடாவூரில் அனுமதியின்றி ஆட்டுச்சந்தை தொடங்கப்பட்டதாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு விதிக்குட்பட்டு சந்தை நடத்த, நீதிமன்றம் உத்தரவிட்டது. தெடாவூரில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை சந்தை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. கால்நடை வியாபாரிகள், சட்ட விரோதமாக தெடாவூரில் நடத்துகின்றனர். விதி மீறி சந்தை அமைப்பவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.