/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஏரியில் உள்ள மரங்களை அகற்றி ஆழப்படுத்த வேண்டும்ஏரியில் உள்ள மரங்களை அகற்றி ஆழப்படுத்த வேண்டும்
ஏரியில் உள்ள மரங்களை அகற்றி ஆழப்படுத்த வேண்டும்
ஏரியில் உள்ள மரங்களை அகற்றி ஆழப்படுத்த வேண்டும்
ஏரியில் உள்ள மரங்களை அகற்றி ஆழப்படுத்த வேண்டும்
ADDED : ஜூன் 18, 2024 07:10 AM
வீரபாண்டி : ஏரிக்குள் காய்ந்து கருகியுள்ள மரங்களை அகற்றி, ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்பாரப்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேலம் சீரகாபாடி அருகே, கஞ்சமலை அடிவாரத்தில் கல்பாரப்பட்டி ஏரி அமைந்துள்ளது.
ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்டது. கஞ்சமலையில் இருந்து வழியும் மழைநீர் மற்றும் சுனைகளின் தண்ணீர் ஏரிக்கு வருகிறது.அக்னி நட்சத்திர கோடைக்காலம் முடிந்து, 20 நாட்களுக்கு மேலாகியும் வெயில் கொளுத்துவதால், ஏரிக்கு தண்ணீர் வரத்தின்றி குட்டை போல் தண்ணீர் தேங்கியுள்ளது. அதில் வளர்ந்துள்ள மரங்களும் காய்ந்து கருகியுள்ளது.இவற்றை வேறோடு பிடுங்கி அகற்றுவதோடு, துார்வாரி ஆழப்படுத்தினால் மழைக்காலத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.