/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாணவியை தகாத வார்த்தையால் திட்டிய ஆசிரியையை கண்டித்து பள்ளி முற்றுகைமாணவியை தகாத வார்த்தையால் திட்டிய ஆசிரியையை கண்டித்து பள்ளி முற்றுகை
மாணவியை தகாத வார்த்தையால் திட்டிய ஆசிரியையை கண்டித்து பள்ளி முற்றுகை
மாணவியை தகாத வார்த்தையால் திட்டிய ஆசிரியையை கண்டித்து பள்ளி முற்றுகை
மாணவியை தகாத வார்த்தையால் திட்டிய ஆசிரியையை கண்டித்து பள்ளி முற்றுகை
ADDED : பிப் 06, 2024 09:43 AM
இடைப்பாடி: இடைப்பாடியில், மாணவியை தகாத வார்த்தையில் ஆசிரியை திட்டியதாக கூறி, பள்ளியை முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி கவுண்டம்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர், 200க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். தற்காலிக சிறப்பு ஆசிரியரான சபரியம்மாள், நேற்று எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு கராத்தே கற்று கொடுத்து வந்துள்ளார். அப்போது, எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கையில் அணிந்திருந்த வெள்ளி காப்பை பார்த்த ஆசிரியை சபரியம்மாள், தகாத வார்த்தையில் திட்டியதால் அவர் அழுதுள்ளார். பள்ளி முடிந்தவுடன், வேறு ஆசிரியரின் மொபைல்போன் மூலம் தன் தந்தைக்கு அழுது கொண்டே தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு வந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள், 'ஆசிரியர் சபரியம்மாள் என்ன நடந்தது எனக்கூற வேண்டும். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என கூறியுள்ளனர். உடனடியாக பள்ளிக்கு வர முடியாது என, ஆசிரியர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை, இடைப்பாடி போலீசில் மாணவி மூலம் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, சபரியம்மாளை பள்ளிக்கு வரவழைத்து, போலீஸ் எஸ்.எஸ்.ஐ.,க்கள் லதா, செந்தில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். வட்டார வள மேற்பார்வையாளர் சுமதி, வட்டார கல்வி அலுவலர் நாராயணசாமி ஆகியோரும் பள்ளிக்கு வந்து விசாரணை செய்தனர். பின்னர், சிறுமியை தகாத வார்த்தையில் திட்டிய ஆசிரியர் சபரியம்மாள், மாணவியின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார். ஆசிரியர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.