ADDED : ஜூலை 02, 2024 05:23 AM
ஓமலுார்: திருவண்ணாமலை மாவட்டம், எல்லைக்கல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 24.
இவரும், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, சிக்கனம்பட்டியைச் சேர்ந்த ப்ரியதர்ஷிணி, 22, என்பவரும் சென்னையில் பெல்ட் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டு நேற்று, ஓமலுார் கோட்டை பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு, ஓமலுார் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.