Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சொரக்காமடுவு ஏரி ஆக்கிரமிப்பு அளவீடுக்கு ஊராட்சி வலியுறுத்தல்

சொரக்காமடுவு ஏரி ஆக்கிரமிப்பு அளவீடுக்கு ஊராட்சி வலியுறுத்தல்

சொரக்காமடுவு ஏரி ஆக்கிரமிப்பு அளவீடுக்கு ஊராட்சி வலியுறுத்தல்

சொரக்காமடுவு ஏரி ஆக்கிரமிப்பு அளவீடுக்கு ஊராட்சி வலியுறுத்தல்

ADDED : ஜன 28, 2024 10:10 AM


Google News
கொளத்துார்: சொரக்காமடுவு ஏரியில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால், அளவீடு செய்யக்கோரி ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

கொளத்துார், சிங்கிரிப்பட்டி ஊராட்சி, மேட்டூர் - பாலாறு நெடுஞ்சாலையோரம் சொரக்காமடுவு ஏரி உள்ளது. அது நிரம்பினால் சிங்கிரிப்பட்டி, பண்ணவாடி ஊராட்சியில், 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

சில ஆண்டுகளுக்கு முன், ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி பண்ணவாடி வழியே மேட்டூர் அணையில் கலந்தது. நடப்பாண்டு வறட்சியால் ஏரியின் ஒரு பகுதியில் மட்டும், தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி, படிப்படியாக விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதால், அதன் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது.

இதுகுறித்து சிங்கிரிப்பட்டி ஊராட்சி தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், ''சொரக்காமடுவு ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க, அளவீடு செய்து தரும்படி தாலுகா அலுவலகத்தில் சர்வே பிரிவில் ஒரு மாதத்துக்கு முன் மனு கொடுத்து விட்டோம். அளவையர்கள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, அளவீடு செய்து தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்,'' என்றார்.

இ.கம்யூ., கோரிக்கை

பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சி சந்தைப்பேட்டையில் துணை சுகாதார நிலையம், சேவை மையம், நுாலகம், ரேஷன் கடை, வி.ஏ.ஓ., உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. 5 ஏக்கர் கொண்ட சந்தைப்பேட்டை நிலத்தை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இடப்பற்றாக்குறை ஏற்படும் என்பதால் சந்தைப்பேட்டை நிலம், அங்குள்ள மயான நிலத்தை முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற, இ.கம்யூ., கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us