/உள்ளூர் செய்திகள்/சேலம்/'அ.தி.மு.க., கோட்டை எனும் மாயை உடைக்கப்பட்டுள்ளது''அ.தி.மு.க., கோட்டை எனும் மாயை உடைக்கப்பட்டுள்ளது'
'அ.தி.மு.க., கோட்டை எனும் மாயை உடைக்கப்பட்டுள்ளது'
'அ.தி.மு.க., கோட்டை எனும் மாயை உடைக்கப்பட்டுள்ளது'
'அ.தி.மு.க., கோட்டை எனும் மாயை உடைக்கப்பட்டுள்ளது'
ADDED : ஜூன் 20, 2024 07:26 AM
சேலம்: சேலம் லோக்சபா தொகுதியில், தி.மு.க.,வின் வெற்றியால், 'இண்டியா' கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், சேலம், 5 ரோட்டில் நேற்று நடந்தது.
தி.மு.க., மாவட்ட செயலர்களான, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், எம்.பி., செல்வகணபதி, சிவலிங்கம் தலைமை வகித்தனர்.தொடர்ந்து செல்வகணபதி பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலின் நிர்வாகம், உழைப்பால், லோக்சபா தேர்தலில், 40க்கு, 40 என வெற்றி கிடைத்துள்ளது. சேலம் மாவட்டம், அ.தி.மு.க.,வின் கோட்டை என்ற மாயை, இத்தேர்தலில் உடைக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி. சொந்த மாவட்டத்தில் கூட வெற்றி பெறாததால், தலைமை பதவிக்கு ஆபத்து வரும் என பதுங்கும் நிலைக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., தள்ளப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.மேயர் ராமச்சந்திரன், தி.மு.க., மாநகர செயலர் ரகுபதி, கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.