/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலத்தில் வரும் 14ம் தேதி அறிவு திருக்கோயில் ஐம்பெரும் விழா சேலத்தில் வரும் 14ம் தேதி அறிவு திருக்கோயில் ஐம்பெரும் விழா
சேலத்தில் வரும் 14ம் தேதி அறிவு திருக்கோயில் ஐம்பெரும் விழா
சேலத்தில் வரும் 14ம் தேதி அறிவு திருக்கோயில் ஐம்பெரும் விழா
சேலத்தில் வரும் 14ம் தேதி அறிவு திருக்கோயில் ஐம்பெரும் விழா
ADDED : செப் 12, 2025 01:45 AM
சேலம், சேலம் தாதகாப்பட்டி, அறிவு திருக்கோயில் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை யோகா மற்றும் ஆன்மிக கல்வி மையம் சார்பாக வரும், 14ம் தேதி அன்னதானப்பட்டி சீனிவாச மஹாலில் 115ம் ஆண்டு மகரிஷியின் ஜெயந்தி விழா, உலக அமைதி தின விழா, அறக்கட்டளை மற்றும் அறிவு திருக்கோயில் துவக்க விழா, மனைவி நல வேட்பு விழா ஆகிய ஐம்பெரும்
விழா, ஜெயராம் கல்வி நிறுவனங்களின், ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடைபெறுகிறது.மகரிஷி மனிதர்களில் மாமனிதர், மகான்களில் மா மகான் -என்ற தலைப்பில் பேராசிரியை அருட்செல்வியும், வள்ளலார் வழியில் மகரிஷி என்ற தலைப்பில் -பேராசிரியை அங்கையற்கண்ணியும், உலக அமைதிக்கு உலக நலத்தொண்டர் என்ற தலைப்பில், அமுதுநிலை பேராசிரியர் உழவன் மா தங்கவேலு பேச உள்ளனர்.
முதுநிலை பேராசிரியர் சேகர் தலைமையில், மனவளக்கலை யோகாவில் மகரிஷி மிகவும் வலியுறுத்துவது--- ---- பயிற்சிகளே, தவமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாலையில், மனைவி நல வேட்பு விழாவில் மகத்துவம், குடும்ப அமைதிக்கு மகளிர் பங்கு என்ற தலைப்பில் முதுநிலை பேராசிரியை கலாவதி சேகர் பேசுகிறார். முன்னதாக பேராசிரியர் பழனிச்சாமி வரவேற்புரை வழங்க உள்ளார்.