/உள்ளூர் செய்திகள்/சேலம்/மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் சாவுமனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் சாவு
மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் சாவு
மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் சாவு
மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் சாவு
ADDED : ஜன 28, 2024 03:37 PM

ஆத்துார் : சேலம் மாவட்டம் ஆத்துார், கோட்டையை சேர்ந்தவர் மாணிக்கம், 93.
விவசாயி, கோவில் பூசாரியான இவருக்கு மனைவி ராஜம்மாள், 85, மகன்கள் பாண்டியன், 60, மாரிமுத்து, 55, தங்கமணி, 52, மகள்கள் மல்லிகா, 50, விஜயா, 48, மட்டுமின்றி, 15 பேரக்குழந்தைகள் உள்ளனர்.உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜம்மாள், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு உயிரிழந்தார். அவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அழுது கொண்டிருந்த மாணிக்கமும், நள்ளிரவு, 1:00 மணிக்கு உயிரிழந்தார். இறப்பிலும் இணைந்த தம்பதியரால், அக்குடும்பத்தினர் சோகம் அடைந்தனர். பின் ஒரே நேரத்தில் இருவரது உடலையும் எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.