/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தற்காலிக ஆசிரியர் சம்பளம் ரூ.35 லட்சம் ஒதுக்கீடு தற்காலிக ஆசிரியர் சம்பளம் ரூ.35 லட்சம் ஒதுக்கீடு
தற்காலிக ஆசிரியர் சம்பளம் ரூ.35 லட்சம் ஒதுக்கீடு
தற்காலிக ஆசிரியர் சம்பளம் ரூ.35 லட்சம் ஒதுக்கீடு
தற்காலிக ஆசிரியர் சம்பளம் ரூ.35 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஜூன் 13, 2025 01:47 AM
சேலம், தமிழக தொடக்க கல்வித்துறையில் செயல்படும் அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மை குழு மூலம், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, 12,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில், 93.41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல், ஜூன், ஜூலை மாதங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, தமிழக அரசு, 27.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில், 250க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரியும் நிலையில், அவர்களுக்கு, 35.19 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.