/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விளையாட்டு ஆணையம் சார்பில் சேலத்தில் தற்காலிக விடுதி தயார் விளையாட்டு ஆணையம் சார்பில் சேலத்தில் தற்காலிக விடுதி தயார்
விளையாட்டு ஆணையம் சார்பில் சேலத்தில் தற்காலிக விடுதி தயார்
விளையாட்டு ஆணையம் சார்பில் சேலத்தில் தற்காலிக விடுதி தயார்
விளையாட்டு ஆணையம் சார்பில் சேலத்தில் தற்காலிக விடுதி தயார்
ADDED : ஜூன் 05, 2025 01:35 AM
சேலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு விடுதிகள் உள்ளன. சேலத்தில் மத்திய அரசின் விளையாட்டு ஆணைய, 'சாய்' விளையாட்டு விடுதி, மகாத்மா காந்தி மைதானத்தில் உள்ளது.
தமிழக துணை முதல்வர், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக கட்ட உத்தரவிட்டார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் கூறியதாவது:
சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், 7 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக விளையாட்டு விடுதி கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. நடப்பாண்டு முதல் சேலத்தில், விளையாட்டு விடுதி தற்காலிகமாக, காந்தி மைதானத்தில், முதல்கட்டமாக, 15 தடகள பயிற்சி மாணவர்கள் தங்கும்படி அறை, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விடுதி மாணவர்கள் தேர்வு முடிந்து, சென்னையில் கலந்தாய்வு நடக்கிறது. அதில் ஒதுக்கப்படும் மாணவர்கள், அடுத்த வாரம் விடுதிக்கு வருவர். இங்கு பயிற்சி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.