/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாநகரில் பஸ் ஸ்டாப்புகளை மாற்றி அமைக்க ஆய்வு மாநகரில் பஸ் ஸ்டாப்புகளை மாற்றி அமைக்க ஆய்வு
மாநகரில் பஸ் ஸ்டாப்புகளை மாற்றி அமைக்க ஆய்வு
மாநகரில் பஸ் ஸ்டாப்புகளை மாற்றி அமைக்க ஆய்வு
மாநகரில் பஸ் ஸ்டாப்புகளை மாற்றி அமைக்க ஆய்வு
ADDED : அக் 19, 2025 02:37 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சாலை பாதுகாப்பு கூட்டத்தில், மாநகரில் பல்வேறு இடங்களில், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பஸ் ஸ்டாப்புகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்ப-டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பஸ் ஸ்டாப்புகளை மாற்றி அமைத்து, நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி கமிஷனர் இளங்-கோவன், மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தேசய்யா உள்-ளிட்டோர் நேற்று, கலெக்டர் அலுவலகம், 4 ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், அஸ்தம்பட்டி, சுந்தர் லாட்ஜ் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.


