/உள்ளூர் செய்திகள்/சேலம்/சட்ட கல்லூரி - விடுதி இடையே பஸ் வசதிக்கு மாணவர்கள் கோரிக்கைசட்ட கல்லூரி - விடுதி இடையே பஸ் வசதிக்கு மாணவர்கள் கோரிக்கை
சட்ட கல்லூரி - விடுதி இடையே பஸ் வசதிக்கு மாணவர்கள் கோரிக்கை
சட்ட கல்லூரி - விடுதி இடையே பஸ் வசதிக்கு மாணவர்கள் கோரிக்கை
சட்ட கல்லூரி - விடுதி இடையே பஸ் வசதிக்கு மாணவர்கள் கோரிக்கை
ADDED : பிப் 12, 2024 10:35 AM
வீரபாண்டி: சேலம் - கோவை 4 வழிச்சாலையில் கொம்பாடிப்பட்டி பிரிவு அருகே, அரசு சட்டக்கல்லுாரி செயல்படுகிறது. அதன் மாணவர் விடுதி கொம்பாடிப்பட்டியில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் கஞ்சமலை அடிவாரத்தில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சட்ட கல்லுாரியில் படிக்க வந்துள்ள மாணவர்கள், விடுதியில் இருந்து கல்லுாரிக்கு வந்து செல்ல பஸ் வசதி இல்லாததால், தினமும், 4 கி.மீ., நடந்து சென்று வருகின்றனர்.
விடுதியை சுற்றியுள்ள கொம்பாடிப்பட்டி, சேவாம்பாளையம், மேல் காட்டுவளவு, ரொட்டிமணியக்காரனுார் பகுதிகள் வழியே சேலத்தில் இருந்து இளம்பிள்ளைக்கு சில ஆண்டுகளுக்கு முன் வரை அரசு பஸ் இயக்கப்பட்டன. விடுதி அருகே புதிதாக சிப்காட் தொழிற்பூங்கா, மெகா கூட்டுக்குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையம் உள்ளதால் அரசு சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு மட்டுமன்றி இப்பகுதி மக்களும் பயன்பெறும்படி, அந்த வழியே சென்ற பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க, சட்ட கல்லுாரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.