Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உடல்நலக்குறைவால் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

உடல்நலக்குறைவால் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

உடல்நலக்குறைவால் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

உடல்நலக்குறைவால் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

ADDED : ஜூன் 24, 2025 01:16 AM


Google News
வாழப்பாடி, வாழப்பாடி அடுத்த பேளூரை சேர்ந்தவர் வளவன் ராஜா, 52. இவர், கரியகோவில் போலீஸ் ஸ்டேஷனில், சேலம் மாவட்ட

எஸ்.பி., தனிப்பிரிவில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். இவர் கடந்த, 21 காலை, 9:00 மணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சேலம் அருகே அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், மதியம், 12:30 மணிக்கு உயிரிழந்தார். இவருக்கு சரிதா என்ற மனைவி, வேல் பிரகாஷ், ஹரிணிவாஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள மயானத்தில், அவரது உடல் அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க, நேற்று மாலை, 5:45 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us