/உள்ளூர் செய்திகள்/சேலம்/ராம பக்தர்களுக்காக பா.ஜ., சார்பில் சிறப்பு ரயில் அயோத்தி சென்று வர சலுகை கட்டணத்தில் வசதிராம பக்தர்களுக்காக பா.ஜ., சார்பில் சிறப்பு ரயில் அயோத்தி சென்று வர சலுகை கட்டணத்தில் வசதி
ராம பக்தர்களுக்காக பா.ஜ., சார்பில் சிறப்பு ரயில் அயோத்தி சென்று வர சலுகை கட்டணத்தில் வசதி
ராம பக்தர்களுக்காக பா.ஜ., சார்பில் சிறப்பு ரயில் அயோத்தி சென்று வர சலுகை கட்டணத்தில் வசதி
ராம பக்தர்களுக்காக பா.ஜ., சார்பில் சிறப்பு ரயில் அயோத்தி சென்று வர சலுகை கட்டணத்தில் வசதி
ADDED : ஜன 24, 2024 11:30 PM
சேலம்:அயோத்தி செல்ல விரும்பும் ராம பக்தர்களுக்காக, பா.ஜ., சார்பில் சலுகை கட்டணத்தில், ராமர் தரிசனம் செய்து வர சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த, 22ல், பிரதமர் மோடியால், பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் முதல், தரிசனத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும், பா.ஜ., சார்பில் ராம பக்தர்களுக்கு அயோத்தி செல்ல வழிகாட்டல், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட பக்தர்களுக்காக, பா.ஜ., சார்பில், சலுகை கட்டணத்தில் அயோத்தி சென்று வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பா.ஜ., சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத் கூறியதாவது:
தமிழகத்திலிருந்து ஏராளமான ராம பக்தர்கள், அயோத்தி செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு வழிகாட்டி, உணவு, தங்குமிடம், ரயில் பயணம் ஆகிய அனைத்தும் சலுகை கட்டணத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை-அயோத்தி சிறப்பு ரயில் ஜன., 29, பிப்., 3, 8, 13, 18, 23, 28 ஆகிய தேதிகளில் இரவு, 8:45 மணிக்கு கிளம்பி, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே, 53 மணி நேரம் பயணித்து, மூன்றாம் நாள் அதிகாலை, 2:00 மணிக்கு அயோத்தி சென்றடையும். அங்கிருந்து, பிப்., 2, 7, 12, 17, 22, 27, மார்ச் 3 ஆகிய தேதிகளில் மதியம், 12:20 மணிக்கு கிளம்பி, 51 மணி நேர பயணத்துக்கு பின் மதியம், 3:00 மணிக்கு கோவை வந்தடைகிறது.
திருப்பூர்-அயோத்தி சிறப்பு ரயில், ஜன., 31, பிப்., 5, 10, 15, 20, 25 ஆகிய தேதிகளில் இரவு, 9:35 மணிக்கு கிளம்பி ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே, 52 மணி நேரத்துக்கு பின், அதிகாலை, 2:00 மணிக்கு அயோத்தி சென்றடையும். அங்கிருந்து, பிப்., 4, 9, 14, 19, 24, 29 ஆகிய தேதிகளில் மதியம், 12:20 மணிக்கு கிளம்பி, 49 மணி நேரத்துக்கு பின், சேலம், ஈரோடு வழியாக மதியம், 1:45 மணிக்கு திருப்பூர் வந்தடையும்.
ஈரோடு-அயோத்தி சிறப்பு ரயில், பிப்,., 1, 6, 11, 16, 21, 26 தேதிகளில் இரவு, 10:20 மணிக்கு கிளம்பி, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியே, 51 மணி நேரத்துக்கு பின், அதிகாலை 2:00 மணிக்கு அயோத்தி சென்றடையும். அங்கிருந்து, பிப்., 5, 10, 15, 20, 25, மார்ச் 1 ஆகிய தேதிகளில் மதியம், 12:20 மணிக்கு கிளம்பி, 48 மணி நேர பயணத்துக்கு பின், சேலம் வழியே மதியம், 12:50 மணிக்கு ஈரோடு வந்தடையும்.
சேலம்-அயோத்தி சிறப்பு ரயில், பிப்., 2, 7, 12, 17, 22, 27 ஆகிய தேதிகளில் இரவு, 11:30 மணிக்கு கிளம்பி, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியே, 50 மணி நேர பயணத்துக்கு பின் அதிகாலை, 2:00 மணிக்கு அயோத்தி சென்றடையும். அங்கிருந்து பிப்., 6, 11, 16, 21, 26, மார்ச் 2 ஆகிய தேதிகளில் மதியம், 12:20 மணிக்கு கிளம்பி, 47 மணி நேர பயணத்துக்கு பின், காலை 11:40 மணிக்கு சேலம் வந்து சேரும். இந்த ரயில்களில் படுக்கை வசதியோடு, அயோத்தியில் போக்குவரத்து, தங்குமிடம், வந்து சேரும் வரை உணவு என அனைத்தும் சேர்த்து, கோவை, திருப்பூரிலிருந்து, 2,600 ரூபாய், ஈரோட்டிலிருந்து, 2,400 ரூபாய், சேலத்திலிருந்து, 2,300 ரூபாய் கட்டணத்தில் ராமரை தரிசித்து, திரும்பலாம்.
இதற்கு ஒருங்கிணைக்க, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாநகர் மாவட்டத்தில் 94694 12233, சேலம் கிழக்கு மாவட்டத்தில் 89037 91507, சேலம் மேற்கு மாவட்டத்தில், 98655 67364 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, ராம பக்தர்கள் தங்கள் பயணங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.