/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நந்தவன ஊஞ்சலில் தாயாருடன் சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜர் நந்தவன ஊஞ்சலில் தாயாருடன் சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜர்
நந்தவன ஊஞ்சலில் தாயாருடன் சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜர்
நந்தவன ஊஞ்சலில் தாயாருடன் சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜர்
நந்தவன ஊஞ்சலில் தாயாருடன் சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜர்
ADDED : ஜூன் 01, 2025 01:33 AM
சேலம், சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 5 நாள் வசந்த உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கு, கோவில் வளாகத்தில் செயற்கை குளம் அமைத்து, அதைச்சுற்றி செடி, கொடிகள், காய்கனிகளால் நந்தவனம் போல் அலங்கரித்து, அதன் மையத்தில் ஊஞ்சல் கட்டி, அதில் சவுந்தரவல்லி தாயாருடன் சவுந்தரராஜரை, சேர்த்தி
சேவையில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து நாதஸ்வர இசை கச்சேரியுடன் சிறப்பு பூஜை நடந்தது. 2ம் நாளான நேற்று நந்தவன ஊஞ்சலில் தாயாருடன் சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜரை எழுந்தருள செய்து, 'மாஸ்டர் ஹரிராம்' குழுவினரின் கச்சேரி நடந்தது.இன்று நாதஸ்வர கச்சேரி, நாளை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், 3ல், கிருஷ்ண பிருந்தாவன கலைக்குழுவினரின் கோலாட்ட நடன நிகழ்ச்சியுடன் வசந்த உற்சவம் நிறைவு பெறும்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியையொட்டி, பழமையான பெருமாள் கோவில்களில், நந்தவனத்தில் ஊஞ்சல் அமைத்து அதில் சேர்த்தி சேவையில் பெருமாளை எழுந்தருள செய்து, வசந்த உற்சவம் நடத்தி மகிழ்விப்பதால், பூமியில் நல்ல மழை பொழிந்து மக்கள் சுபிட்சமாக வாழ்வர் என்பது நம்பிக்கை' என்றனர்.