ADDED : ஜூலை 01, 2025 01:30 AM
சேலம், சேலம் சின்னகொல்லப்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் மயில்வாகனன், 17. பத்தாம் வகுப்பு படித்து விட்டு, கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு தனது தாய் தனலட்சுமியுடன், யமகா பைக்கில் கோரி மேடு பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேனும், பைக்கும் மோதியது.
இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ், மயில்வாகனன் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி உயிருக்கு போராடினார். அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு
உயிரிழந்தார்.