/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சீதா - ராமர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம் சீதா - ராமர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
சீதா - ராமர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
சீதா - ராமர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
சீதா - ராமர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED : மே 26, 2025 05:29 AM
சேலம்: சேலம் சந்திரசேகரன் - கமலம் பவுண்டேஷன் சார்பில், 13ம் ஆண்டாக, சீதா - ராமர் திருக்கல்யாண உற்சவம், சீரங்கபா-ளையம் டி.ஆர்.எஸ்., மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கி-யது. நேற்று காலை உஞ்சவிருத்தியுடன் சீதா திருக்கல்யாண உற்-சவம் தொடங்கியது.
கல்யாணராமன் பாகவதர் குழுவினர், ராமா-யண காவியத்தை பாடினர். தொடர்ந்து வேத மந்திரம் முழங்க, சீதா ராமச்சந்திர மூர்த்திகளின் வெள்ளி விக்ரகங்கள், தஞ்சாவூர் ஓவிய படத்துக்கு, திருமாங்கல்யம் சூட்டி கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. திரளான பக்தர்கள், சீதா - ராமரை மணக்கோ-லத்தில் தரிசித்தனர். அனைவருக்கும் கல்யாண விருந்து அளிக்கப்-பட்டது. இரவு ஆஞ்சநேயர் விடையாற்றி உற்சவத்துடன் திருக்-கல்யாண வைபவம் நிறைவு பெற்றது.