/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீடுகள் முன் கழிவுநீர் தேக்கம் டவுன் பஞ்., ஆபீஸ் முற்றுகை வீடுகள் முன் கழிவுநீர் தேக்கம் டவுன் பஞ்., ஆபீஸ் முற்றுகை
வீடுகள் முன் கழிவுநீர் தேக்கம் டவுன் பஞ்., ஆபீஸ் முற்றுகை
வீடுகள் முன் கழிவுநீர் தேக்கம் டவுன் பஞ்., ஆபீஸ் முற்றுகை
வீடுகள் முன் கழிவுநீர் தேக்கம் டவுன் பஞ்., ஆபீஸ் முற்றுகை
ADDED : செப் 11, 2025 01:09 AM
கெங்கவல்லி :கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து, 8வது வார்டில் உள்ள கடைவீதி, முஸ்லிம் தெரு, செக்குமேட்டில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து, குடியிருப்புகள் முன் தேங்கி நின்றது.
இதனால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளதாக நேற்று, தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை, மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம், செயல் அலுவலர் ஜெசிமாபானு, 'தேங்கும் மழைநீர், கழிவு நீர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தார். பின் மக்கள் கலைந்து சென்றனர்.