/உள்ளூர் செய்திகள்/சேலம்/கான்ட்ராக்டரின் மனைவியை கொன்ற வேலைக்காரன் கைதுகான்ட்ராக்டரின் மனைவியை கொன்ற வேலைக்காரன் கைது
கான்ட்ராக்டரின் மனைவியை கொன்ற வேலைக்காரன் கைது
கான்ட்ராக்டரின் மனைவியை கொன்ற வேலைக்காரன் கைது
கான்ட்ராக்டரின் மனைவியை கொன்ற வேலைக்காரன் கைது
ADDED : ஜன 29, 2024 10:59 AM
நங்கவள்ளி: நங்கவள்ளி, நரிக்கல்லுாரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 55. பொதுப்பணித்துறை கான்ட்ராக்டர். இவரது மனைவி இந்திராணி, 45. இவர்களது மகன் கார்த்திக், 22, புதுச்சேரியில் மருத்துவம் படிக்கிறார். மகள் வளர்மதி, 25, திருமணமாகி கோவையில் வசிக்கிறார். இதனால் ஈஸ்வரன், இந்திராணி மட்டும் வீட்டில் வசித்தனர்.
கடந்த, 26 காலை, வேலை நிமித்தமாக ஈஸ்வரன் வெளியே சென்றார். மதியம் அவர் திரும்பி வந்தபோது, வீட்டுக்கு வெளியே தலை சிதைந்த நிலையில் இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த தாலிக்கொடி மாயமாகி இருந்தது.
ஓமலுார் டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில் போலீசார் விசாரித்தனர். அதில் ரத்தக்கறை படிந்த தென்னை மட்டையில் கை ரேகை இருந்தது.
இதனால் ஈஸ்வரன் வீட்டில் உள்ளவர்களின் கை ரேகையை ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, அந்த வீட்டில் ஆடு, மாடுகளை குளிப்பாட்டும் வேலை செய்து வந்த, நரிக்கல்லுாரை சேர்ந்த பாலு, 27, என்பவரின் கை ரேகையுடன் ஒத்துப்போனது.
நேற்று முன்தினம் இரவு அவரிடம் விசாரித்ததில், பணத்துக்கு ஆசைப்பட்டு இந்திராணி தலையில் கல்லை போட்டும், தென்னை மட்டையால் தாக்கியும் கொலை செய்தது தெரிந்தது. இந்திராணி அணிந்திருந்த நகையை அடகு வைத்து பணம் பெற்றதையும் ஒப்புக்கொண்டார். பாலுவை போலீசார் நேற்று கைது செய்தனர்.