/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பால் சங்கத்தில் முறைகேடு செயலர், பரிசோதகர் 'சஸ்பெண்ட்' பால் சங்கத்தில் முறைகேடு செயலர், பரிசோதகர் 'சஸ்பெண்ட்'
பால் சங்கத்தில் முறைகேடு செயலர், பரிசோதகர் 'சஸ்பெண்ட்'
பால் சங்கத்தில் முறைகேடு செயலர், பரிசோதகர் 'சஸ்பெண்ட்'
பால் சங்கத்தில் முறைகேடு செயலர், பரிசோதகர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 15, 2025 02:15 AM
சேலம், சேலம் மாவட்டம் வாழப்பாடி, வி.புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், 320 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் மூலம் தினமும், 5,200 முதல், 5,400 லிட்டர் பால் கொள்முதல் நடக்கிறது. அங்கு பாலின் தரத்தை குறைத்து மதிப்பீடு செய்து வாங்கி, முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. அதனால் முதுநிலை ஆய்வாளர் விஜயை, விசாரணை அதிகாரியாக நியமித்து, துணை பதிவாளர் புவனேஸ்வரி உத்தரவிட்டார்.
கடந்த, 3 மாதங்களாக விசாரணை நடந்தது. அதில், சங்கத்தின் எடை கருவி, பால் பரிசோதனை கருவியில் மாற்றம் செய்து, உற்பத்தியாளர்களை ஏமாற்றி ஊழல் செய்தது, உபரி பால், போலி உறுப்பினர்கள் பெயரில் பட்டுவாடா; மாதிரி பாலை, மீண்டும் சங்க கணக்கில் வரவு வைக்காமல் விற்றது உள்பட பல்வேறு முறைகேடு, நிதி இழப்பு என, 25 குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'கடந்த, 8 மாதங்களில் மட்டும், 24.89 லட்சம் ரூபாய் முறைகேடு, நிதி இழப்பு நடந்துள்ளது' என கூறப்பட்டுள்ளது. இதில் பாலின் தரம் குறைவாக இருப்பதாக கூறி, 7.58 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதனால் சங்க செயலர் லிங்கேஸ்வரன், 30, பால் பரிசோதகர் செந்தில்குமார், 45, ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து, துணை பதிவாளர் புவனேஸ்வரி, சமீபத்தில் உத்தரவிட்டார்.