/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பள்ளி மாணவர்கள் சிலம்ப போட்டியில் ஆர்வம் பள்ளி மாணவர்கள் சிலம்ப போட்டியில் ஆர்வம்
பள்ளி மாணவர்கள் சிலம்ப போட்டியில் ஆர்வம்
பள்ளி மாணவர்கள் சிலம்ப போட்டியில் ஆர்வம்
பள்ளி மாணவர்கள் சிலம்ப போட்டியில் ஆர்வம்
ADDED : ஜூலை 04, 2025 02:27 AM
சேலம், பள்ளி கல்வித்துறை சார்பில், சேலம் வருவாய் மாவட்டம், நகர்புற மைய அளவில், மாணவர்களுக்கு சிலம்ப போட்டி, காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட உடற்கல்வி அலுவலர் லாரன்ஸ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, கம்பு சண்டை, ஒற்றைக்கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு தொடுமுறை உள்ளிட்ட சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சிறப்பாக விளையாடியவர்களை, உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்தனர். அதேபோல் மாவட்டத்தில், 11 மையங்களில் இப்போட்டிகள் நடந்தது. இன்று மாணவியருக்கு போட்டி நடக்கிறது.